சபரிமலை விவகாரம்: பாத்திமாவை பந்தாடிய பி.எஸ்.என்.எல்

  • IndiaGlitz, [Wednesday,October 24 2018]

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து கடந்த வாரம் ஐயப்பன் சன்னிதானம் திறக்கப்பட்டதும் பல பெண்கள் கோவிலுக்கு செல்ல முயன்றனர். அவர்களில் பத்திரிகையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரெஹானா பாத்திமாவும் அடங்குவர். ஆனால் சபரிமலை சன்னிதானத்தில் இருந்த பக்தர்கள், தந்திரிகள் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் இருவரையும் கீழே இறக்க கேரள அரசு உத்தரவிட்டது.

இந்த சம்பவத்தில் பெண்ணியவாதி பாத்திமா இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக கூறி கேரள முஸ்லிம் ஜமாத் அவரை முஸ்லீம் சமூகத்தில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் கொச்சியில் உள்ள போட் ரெட்டி பி.எஸ்.என்.எல் கிளையில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றி வந்த பாத்திமாவை பி.எஸ்.என்.எல் நிர்வாகம், பழரவிட்டம் நகரில் உள்ள கிளைக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தது.

ஆனால் பாத்திமாவை பழரவிட்டோம் கிளையில் இருந்தும் வெளியேற்ற வேண்டும் எனக் கோரி நேற்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலை விவகாரத்தால் பாத்திமா பணி செய்யும் இடத்தில் இருந்து பந்தாடப்படுவதால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.