சாலையின் குறுக்கே விழுந்த பிஎஸ்என்எல் டவர்: ஃபானி புயலின் கொடூர காட்சிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று காலை ஒடிஷா மாநிலத்தில் கரை கடந்த ஃபானி புயல் கணக்கிட முடியாத அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. புயல் காரணமாக வீசிய பயங்கர சூரைக்காற்றில் பறந்த பொருட்களினால் சுமார் 200 பேர் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் ஒடிஷாவின் முக்கிய பகுதியான கட்டாக்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே வைக்கப்பட்டிருந்த பிஎஸ்என்எல் டவர் அடியோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிலைகுலைந்து போய் உள்ளது. ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளது கணக்கிலடங்கா மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் ஒடிஷாவின் பெரும்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் மின் இணைப்பு வர இன்னும் ஒருசில நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புவனேஷ்வர் நகரில் உள்ள பல முக்கிய சாலைகள், போர் முடிந்தபின் காணப்படும் பகுதிபோன்று பார்ப்பதற்கே கொடூரமாக உள்ளது. தற்போது புயல் கரை கடந்துவிட்டதை அடுத்து மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் பல நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.
#BSNL tower topples in #Cuttack . #CycloneFani #Odisha #Fani @Outlookindia pic.twitter.com/TAhIS0Gks3
— Ruben Banerjee (@Rubenbanerjee) May 3, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments