ரூ.96க்கு தினமும் 10ஜிபி 4ஜி டேட்டா: பி.எஸ்.என்.எல் அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,August 27 2019]

ஒரு காலத்தில் மொபைல் போனில் டேட்டா பயன்படுத்தினால் பர்ஸ் காலியாகிவிடும் அளவுக்கு அதிக காஸ்ட்லியாக இருந்தது. ஆனால் ஜியோ நிறுவனம் அறிமுகமான பின்னர் தினமும் ஒரு ஜிபி, இரண்டு ஜிபி என இலவச டேட்டாக்களை வாரி வழங்கியது. இதனையடுத்து போட்டியை சமாளிக்க முடியாமல் மற்ற நிறுவனங்களும் வேறு வழியின்றி டேட்டா விலையை அதிரடியாக குறைத்தது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே நஷ்டத்தில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை பெருமளவு இழந்து வருகிறது. இந்த நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

இதன்படி ரூ.96க்கு ரீசார்ஜ் செய்தால், ஒரு நாளைக்கு 10 ஜிபி வீதம் 28 நாட்களுக்கு 280ஜிபி டேட்டா பயன்படுத்தலாம் என்றும், அதேபோல் ரூ.236க்கு ரீசார்ஜ் செய்தால், ஒரு நாளைக்கு 10 ஜிபி வீதம் 84 நாட்களுக்கு 840 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம் என பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.

மற்ற நிறுவனங்கள் தினமும் ஒரு ஜிபி முதல் ஐந்து ஜிபி வரை மட்டுமே கொடுத்து வரும் நிலையில் தினமும் 10 ஜிபி என்ற அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா, பண்டாரா, பீட், ஜல்னா, ஒஸ்மானாபாத் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சென்னை உள்பட மற்ற பகுதிகளுக்கும் விரைவில் இந்த சலுகை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது