அரை நிர்வாண உடலில் பெயிண்டிங்: சபரிமலை பெண் போராளி மீது நடவடிக்கை எடுத்த பி.எஸ்.என்.எல்

  • IndiaGlitz, [Wednesday,July 01 2020]

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று போராடிய பெண் போராளி ரெஹானா பாத்திமா என்பவர் சமீபத்தில் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது குழந்தைகளையே தனது உடம்பில் பெயிண்டிங் வரைய செய்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் காவல்துறையினர் ரெஹானா மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

இந்த நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம், ரெஹானாவுக்கு அதிரடியாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. ரெஹானா தங்கள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்றும், அவர் மீது எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும், எனவே அவர் தற்போது குடியிருக்கும் பி.எஸ்.என்.எல் குடியிருப்பில் இருக்கும் வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது

கடந்த மே மாதம் சர்ச்சைக்குரிய ஒரு பதிவை ரெஹானா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும், இன்னும் 30 நாட்களில் பி.எஸ்.என்.எல் குடியிருப்பில் இருந்து அவர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் பி.எஸ்.என்.எல் நோட்டீஸ் அனுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் போஸ்கோ சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்யக்கூடாது என கேரள உயர்நீதிமன்றத்தில் ரெஹானா ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார் என்பதும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது