பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை சரிவு
- IndiaGlitz, [Tuesday,February 26 2019]
பாகிஸ்தானில் இன்று அதிகாலை இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை முற்றிலும் அழித்த நிலையில் இந்த தாக்குதல் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை இன்று சரிந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை சற்றுமுன் 227 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 35985 ஆக உள்ளது. அதேபோல் நிஃப்டி 56 புள்ளிகள் குறைந்து 10823ஆக உள்ளது. அதேபோல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.09ஆக உயர்ந்துள்ளது.
இரு நாடுகளிடையே போர் பதட்டம் உருவாகியுள்ள நிலையில் இயல்பாகவே இவ்வாறு ரூபாய் மதிப்பு சரிவடைவது வழக்கம்தான் என்றும் அதுதான் இன்றும் நடந்துள்ளது என்றும் இன்னும் ஓரிரு நாளில் பங்குச்சந்தை மீண்டும் கரடியின் பிடியில் இருந்து காளைக்கு மாறும் என்றும் பங்குச்சந்தை வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.