பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை சரிவு

  • IndiaGlitz, [Tuesday,February 26 2019]

பாகிஸ்தானில் இன்று அதிகாலை இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை முற்றிலும் அழித்த நிலையில் இந்த தாக்குதல் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை இன்று சரிந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை சற்றுமுன் 227 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 35985 ஆக உள்ளது. அதேபோல் நிஃப்டி 56 புள்ளிகள் குறைந்து 10823ஆக உள்ளது. அதேபோல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.09ஆக உயர்ந்துள்ளது.

இரு நாடுகளிடையே போர் பதட்டம் உருவாகியுள்ள நிலையில் இயல்பாகவே இவ்வாறு ரூபாய் மதிப்பு சரிவடைவது வழக்கம்தான் என்றும் அதுதான் இன்றும் நடந்துள்ளது என்றும் இன்னும் ஓரிரு நாளில் பங்குச்சந்தை மீண்டும் கரடியின் பிடியில் இருந்து காளைக்கு மாறும் என்றும் பங்குச்சந்தை வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

More News

இந்திய விமானப்படையினர் நன்றாக விளையாடியுள்ளனர்: சேவாக்

இந்திய விமானப்படை இன்று பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அடித்து நொறுக்கியுள்ள நிலையில் இந்திய படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

குஜராத் மீது ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

புல்வாமா தாக்குதலுக்கு இன்று அதிகாலை இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையிடம்

இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து உள்துறை செயலாளர் விளக்கம்

புல்வாமா தாகுதலுக்கு பதிலடியாக இன்று இந்திய விமானம் பாகிஸ்தானுக்குள் புகுந்து எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தது.

இந்தியாவின் பதிலடி தொடரும்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் ஹரிஹரன்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருந்த தீவிரவாத முகாம்களை 1000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளால் அழித்துள்ளது.

இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து கமல்ஹாசன்!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் 2000 பேர் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 12 இடங்களில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்களில் துல்லியமாக தாக்குதல்