ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இடைத்தரகர்கள் காட்டில் பெய்த மழை
Wednesday, April 19, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது அனைவருக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்த உண்மை பணப்பட்டுவாடாதான். ஆனால் இந்த பணப்பட்டுவாடா காரணத்தால் பொதுமக்களுக்கு மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருந்த இடைத்தரகர்கள் காட்டில் நல்ல மழையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்கட்டமாக ஓட்டு ஒன்றுக்கு ரூ.4000 முதல் ரூ.5000 வரை அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளது. இந்த பட்டுவாடா அக்கட்சிகளின் இடைத்தரகர்கள் மூலம் நடந்தது. இந்த இடைத்தரகர்களை அரசியல் கட்சிகள் நன்றாக கவனித்த போதிலும், பொதுமக்களுக்கு ரூ.2000 முதல் ரூ.3000 மட்டுமே கொடுத்துவிட்டு ஓட்டு ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை சுருட்டியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோதிலும் கண்டும் காணாமல் இருந்ததற்கு காரணம், இந்த விஷயத்தில் இருக்கும் ரிஸ்க்தான். தேர்தல் கமிஷன் அதிகார்களால் அல்லது போலிசால் இடைத்தரகர்கள் பிடிபட்டால் சந்திக்கும் வழக்கில் இருக்கும் ரிஸ்க் காரணமாக அரசியல்வாதிகள் இதை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments