தவறான உறவின்போது மரணமடைந்த இளம்பெண்: காதலன் கைது!

  • IndiaGlitz, [Thursday,April 11 2019]

சுவிஸ் நாட்டின் ஓட்டல் அறை ஒன்றில் காதலர்கள் இருவர் முரட்டுத்தனமாக உறவு கொண்டதால் காதலி பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த 22 வயது இளம்பெண் அன்னா ரீட். இவரும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த இவருடைய காதலரும் ஓட்டல் ஒன்றை அறை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த அறையில் இருந்து சிறிது நேரத்தில் பதட்டத்துடன் ஓடி வந்த காதலன், தனது காதலி மயக்கத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக ஓட்டல் ரிசப்சனிஸ்ட் ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர்கள் ஓட்டல் அறையில் இருந்த இளம்பெண்ணை பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார், காதலனிடம் விசாரணை செய்தபோது இருவரும் இருவரும் உறவு கொண்டபோது திடீரென அன்னா ரீட் மயக்கம் அடைந்ததாக கூறினார். ஆனால் அன்னா ரீட் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் அவருக்கு மூச்சுத்திணறல், சிறிய எலும்பு முறிவுகள் காரணமாக மரணம் அடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து காதலன், அன்னா ரீட் இடம் முரட்டுத்தனமாக உறவு கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் காதலனை கைது செய்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.