தகதகவென பற்றி எரியும் விமானம்…வைரல் வீடியோ!!!

  • IndiaGlitz, [Wednesday,November 25 2020]

ஸ்பெயின் நாட்டு விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று பற்றி எரியும் காட்சி சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி வருகிறது. ஸ்பெயின் நாட்டின் காஸ்டெல்லன் எனும் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தபோது இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்குச் சொந்தமான 747 எனும் விமானம் தனது சேவையை முடித்துக் கொண்டதால் தற்போது காஸ்டெல்லன் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அந்த விமானத்தின் உதிரிபாகங்களை தனியே பிரித்து எடுக்கும் வேலை தற்போது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அப்படி உதிரிப்பாகங்களை பிரிக்கும்போது திடீரெனத் தீப்பொறி சூழ்ந்து ஒட்டுமொத்த விமானமும் தீப்பிடித்து எரிந்து இருக்கிறது.

இதனால் அந்நகரில் உள்ள தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து தீயை விரைந்து அணைத்தனர் எனவும் கூறப்படுகிறது. இந்த விபத்தினால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் விமானத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதம் அடைந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

More News

உங்களுக்கு கொரோனா பாசிடிவ்… தகவல் அறிந்தவுடன் அதிர்ச்சியில் உயிரிழந்த மூதாட்டி!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் 65 வயதான மூதாட்டி ஒருவர் தனக்கு கொரோனா இருக்கும்

கற்பழிப்பு வழக்கில் சிக்கினால் ஆண்மை நீக்கத் தண்டனை… பரபரப்பை ஏற்படுத்தும் புது சட்டம்!!!

அண்டை நாடான பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை

செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து 5000 கன அடி நீர்: 20 பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணி அளவில் வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

புயலால் காரில் செல்ல முடியாத நிலை: சமயோசிதமாக சிந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் அவசரமாக ஹைதராபாத் செல்ல இருந்த நிலையில் புயல் பாதிப்பு காரணமாக எந்த போக்குவரத்தும் இல்லாத நிலையில் சமயோசிதமாக செயல்பட்ட

செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடும் நீரின் அளவு அதிகரிப்பு! இப்போது எவ்வளவு தெரியுமா?

வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்கனவே செம்பரபாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி இருந்த நிலையில் தற்போது நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால்