'பொன்னியின்' செல்வன் நடனம் குறித்து பிருந்தா மாஸ்டர்!

  • IndiaGlitz, [Tuesday,June 29 2021]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு நடன இயக்குனராக பணிபுரிந்து வரும் பிருந்தா, இந்த படத்திற்கு நடன இயக்குனராக பணிபுரிந்த தனது அனுபவத்தை முதல் முறையாக நம்மிடம் மனம் திறந்து கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் அற்புதமான பாடலுக்கு நடனம் அமைப்பதே ஒரு தனி இன்பம்தான் என்றும், அதே போல் மணிரத்னம் அவர்களின் கற்பனைக்கு ஈடுகொடுத்து நடனம் அமைப்பதில் ஒரு சவாலான காரியம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய நடனம் போல் அந்த படத்திற்கு நடனம் அமைக்க முடியாது என்றும் பழங்காலத்தில் உள்ள நடன முறையை அமைப்பதற்காக நாங்கள் அதிகம் யோசிப்போம் என்று பல படங்களுக்கு ஒரே மாதிரியாக நடனம் அமைத்து போரடித்து விட்டதால் இந்த படத்திற்கு வித்தியாசமாக நடனம் அமைக்க வேண்டியிருந்ததால் நாங்கள் அதிகமாக யோசித்தோம் என்றும் அதிகமாக ரிகர்சல் பார்த்தோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் நடனத்தை திரையில் பார்க்கும்போது வித்தியாசமான அனுபவத்தை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்றும் பொன்னியின் செல்வன் படம் குறித்து மனம் திறந்து பிருந்தா தெரிவித்தார்.