ஒரே ஆட்டத்தில் ரசிகர்களை மிரட்டிவிட்ட இந்திய வீரர்… கொண்டாடும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் மேட்சில் இந்திய இளம் வீரர் ஷர்துல் தாகூர் வெறும் 31 பந்துகளில் அரைச்சதத்தை அடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார். இதனால் 32 பந்துகளில் அரைச்சதம் அடித்த ஷேவாக்கின் சாதனையை அவர் முறியடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மிடில் ஆர்டர் பேட்ஸ் மேனான ஷர்துல் தாகூர் டெஸ்ட் மேட்சில் அதுவும் 31 பந்துகளில் அரைச்சதம் அடித்ததைப் பார்த்து மூத்த வீரர்கள் பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு முன்னாள் கேப்டன் கபில்தேவ் அவர்கள் 30 பந்துகளில் அரைச்சதத்தை அடித்து அசர வைத்திருந்தார். தற்போது இளம்வீரர் அந்தச் சாதனையை நெருங்கி இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கிய 4 ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங்கில் களம் இறங்கிய முதல் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பலரும் படு சொதப்பலாக ஆடி சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். இதில் ரோஹித் சர்மா 11 ரன்களுக்கும் லோகேஷ் ராகுல் 17 ரன்களுக்கும் புஜாரா 4 ரன்களுக்கும் ஜடேஜா 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அதையடுத்து களம் இறங்கிய கேப்டன் கோலி அரைசதம் அடித்த நிலையில் அவரும் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய துணை கேப்டன் ராஹானே 14 ரன்களுக்கும் ரிஷப் பண்ட் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 130 ரன்களுக்கு ஒட்டுமொத்தமாக சுருண்டுவிடும் எனக் கணிக்கப்பட்டது.
இப்படியிருந்த நிலையில் களம் இறங்கியவர்தான் ஷர்துல் தாகூர். இவர் 36 பந்துகளை சந்தித்து 57 ரன்களை அசால்ட்டாகக் குவித்தார். இவருடன் ஜோடி போட்ட உமேஷ் யாதவ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் ஷர்துல் தாகூர் செய்த காரியத்தைப் பார்த்துதான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கடும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com