மணப்பெண்ணை வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்த போட்டோகிராபர்: மணமகன் டென்ஷன் ஆன வீடியோ!

  • IndiaGlitz, [Sunday,February 07 2021]

மணப்பெண்ணை வளைச்சு வளைச்சு புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் ஒருவரை டென்ஷனாகி மணமகன் அடித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் நடந்த திருமணம் குறித்த ஒரு வீடியோ மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மணமகன், மணமகள் ஆகிய இருவரும் மணமேடையில் நின்றபோது, போட்டோகிராபர் மணப்பெண்ணை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுக்கிறார். இதனை பொறுமையாக கவனித்து கொண்டிருந்த மணமகன், ஒருகட்டத்தில் டென்ஷனாகி, அந்த போட்டோகிராபரை ஓங்கி அடிக்க, மணமகள் கீழே உட்கார்ந்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

45 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதோடு ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.