முதலிரவில் மணமகளை கடப்பாறையால் குத்தி கொலை செய்த மணமகன்: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
திருவள்ளூர் அருகே முதலிரவில் தனது மனைவியை கடப்பாறையால் குத்திக் கொலை செய்த கணவரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே சோமஞ்சேரி என்ற பகுதியை சேர்ந்த நீதிவாசன் என்பவருக்கு சடையான்குப்பம் என்ற பகுதியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் மிகுந்த கனவுகளுடன் முதலிரவுக்கு சந்தியா அனுப்பி வைக்கப்பட்டார். காலை விடிந்து வெகுநேரமாகியும் நீதிவாசன் மற்றும் சந்தியா ஆகிய இருவரும் வெளியே வராததை கண்ட குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது உள்ளே மணமகள் சந்தியா ரத்த வெள்ளத்தில் மிதந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் கடப்பாறையால் குத்தி கொலை செய்யப்பட்டு இருந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிய உடனடியாக அவர்கள் வந்து சந்தியாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலிரவில் சந்தியாவை அவரது கணவர் நீதிவாசன் தான் குத்திக் கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் நீதிவாசனை போலீசார் தேடினர். அப்போது அவர்களது வீட்டு பக்கத்தில் உள்ள வேப்பமரத்தில் நிர்வாணமாக மணமகன் நீதிவாசன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நீதிவாசன் மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதற்காக அவர் மருந்துகள் எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. ஆனால் கடந்த 3 மாதமாக அவர் அதற்கான மருந்தை எடுத்துக்கொள்ளாததால் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கவே இந்த விபரீதம் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout