ப்ரீ வெட்டிங் போட்டோஷுட்… ஜிம்மில் நடத்தி கெத்துக்காட்டிய மணப்பெண்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணத்திற்கு முன்பு போட்டோஷுட் நடத்தும் விஷயம் தற்போது பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்காக காடு, மலை, வித்தியாசமான அலங்காரம் என்று கல்யாண ஜோடிகள் கடும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது ப்ரீ வெட்டிங் போட்டோஷுட்டை ஜிம்மில் நடத்தி அசத்தியிருக்கிறார் ஒரு இளம்பெண். மேலும் அந்தப் பெண் தனது போட்டோஷுட்டில் டம்பெல்ஸ் முதற்கொண்டு அனைத்து கருவிகளையும் தூக்கி பார்ப்பவர்களை அசர வைத்துள்ளார். அழகான பட்டுப்புடவை அணிந்திருக்கும் அந்தப் கர்ஜிரா முதற்கொண்டு சிகை அலங்காரத்தையும் செய்திருக்கிறார்.
இப்படியொரு அலங்காரத்தைச் செய்துகொண்டு மேடையில் நாணி கோணி நிற்காமல் ஜிம்மிற்கு வந்து வெயிட் மெஷினை தூக்கும் காட்சி பார்ப்போர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. சமீபகாலமாக வொர்க் அவுட் குறித்த விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. பெண்களிடம் சற்று குறைவாகக் காணப்பட்ட இந்த உணர்வு தற்போது திருமணங்களில் வெளிப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அதற்கு சிறந்தவொரு சாட்சியாக இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Pre-wedding shoot...??
— Rupin Sharma IPS (@rupin1992) November 19, 2021
Aaj raaz khula himmat ka....... pic.twitter.com/1d9bJDVMqa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments