மகனின் திருமண நாளில் கர்ப்பத்தை அறிவித்த தாய்: அதிர்ச்சியில் மருமகள்!
- IndiaGlitz, [Monday,May 03 2021]
மகன் திருமணம் நடக்க இருந்த நாளில் தான் கர்ப்பமாக இருப்பதாக மணமகனின் தாயார் அறிவித்தது மணமகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத பெண் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவில், தன்னுடைய திருமண நாளில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு உள்ளார். தன்னுடைய திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது என்றும் அதில் மிகவும் குறைந்த உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
திருமணம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தான் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை பேச வேண்டும் என்று தனது மாமியார் எழுந்து நின்றதும் அவர் என்ன கூற போகிறார் என்பதை அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தனக்கும் தன்னுடைய கணவருக்கும் அவர் வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியதும் தான் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்திருந்தார். திருமண நாள் என்பது எங்களுடைய நாளாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்த நிலையில், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் எங்களை வாழ்த்துவதற்கு பதில் தனது மாமியாருக்கு வாழ்த்து தெரிவித்தது தனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்றும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி தானும் கர்ப்பமாக இருந்ததாகவும் திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே அதை அறிவிக்க இருந்ததாகவும் ஆனால் அதற்குள் தன்னுடைய மாமியார் முந்தி விட்டதாகவும் அவர் ஆதங்கப்பட்டார். இந்த சமூக வலைதள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.