மணக் கோலத்தில் புஷ்-அப் எடுக்கும் மணப்பெண்… வைரல் வீடியோவால் பதறும் நெட்டிசன்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணத்தில் நடக்கும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் சமீபகாலமாக வைரல் ஆகிவருகிறது. அந்த வகையில் டெல்லியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் லெஹெங்கா, விலையுயர்ந்த நகைகள் மற்றும் அசத்தலான மேக்கப் போட்டுக்கொண்டு இருக்கும் மணப்பெண் ஒருவர் மணமேடைக்குச் செல்லும்முன் திடீரென புஷ்-அப் எடுக்கிறார். இந்த வீடியோ தற்போது நெட்டிசன்களை கவர்ந்து இருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்த அனா அரோரா என்பவர் ஒரு விளம்பர மாடலாகவும் அதேநேரத்தில் உணவியல் நிபுணராகவும் இருந்து வருகிறார். இவர் தன்னுடைய திருமணத்திற்காக தன்னை அலங்கரித்துக் கொண்டு ப்ரீ வெட்டிங் ஷுட் நடத்தி இருக்கிறார். அப்போது சிரித்துக் கொண்டே தரையில் திடீரென விழுந்து புஷ்-அப் எடுக்கிறார். இந்தக் காட்சிகள் தற்போது இன்ஸ்டாவில் பதிவிட்ட நிலையில் வைரலாகி வருகிறது.
அனா அரோராவின் மிரட்டலான புஷ்-அப் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் என்னடா இது… அப்போ மாப்பிள்ளை கதி என்னவாகும்? என கமெண்ட் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இப்படி நெகட்டிவான கமெண்டுகளுக்கு மத்தியில் மணப்பெண் தன்னுடைய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தனது திருமணத்தில் காட்டியிருக்கிறார்.
இப்படியான உடற்பயிற்சிகள் அதுவும் மணப்பெண் செய்வது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது என அனா அரோராவிற்கு சிலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கனமான சிவப்பு நிற லெஹெங்காவில் அனா அரோரா புஷ்-அப் எடுக்கும் காட்சிகள் குறித்த வீடியோ இதுவரை 5 லட்சம் லைக்குகளை அள்ளி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments