மணமகன், மணமகள் உள்பட திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா: அதிர்ச்சித் தகவல்
- IndiaGlitz, [Sunday,July 26 2020]
கேரளாவில் சமீபத்தில் திருமணம் ஒன்று நடந்த நிலையில் மணமகன், மணமகள் மற்றும் அந்த திருமணத்தில் கலந்து கொண்ட 41 நபர்களுக்கும் கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டு உள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜூலை 17ஆம் தேதி கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு நேரத்தில் நடைபெறும் திருமணம் என்பதால் மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் இந்த திருமணத்தில் மொத்தம் 43 பேர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அதாவது மணமகன் மணமகள் உள்பட 43 பேர்களுக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அம்மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த அம்மாவட்ட கலெக்டர், மணமகன் மணமகள் உள்பட அந்த திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யுமாறும், திருமணத்தில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடு செய்யாத திருமண ஒருங்கிணைப்பாளர்களை விசாரணை செய்யுமாறும் அவர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மணமகன், மணமகள் உள்பட ஒரு திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டு உள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.