close
Choose your channels

மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் உடைந்தது.. இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா?

Friday, June 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக சென்னையின் பல பகுதிகளில் மணமகன் தேவை, மணமகள் தேவை என்ற விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது என்பதும் இந்த போஸ்டர் எதற்காக ஒட்டப்பட்டு இருக்கிறது என்பது தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போஸ்டரில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால் முக்கிய தகவல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பலரும் அதை ஸ்கேன் செய்த போது உங்களுக்கான மாப்பிள்ளையின் பெயர் சிவாஜி, வயது 42 என்றும், உங்களுக்கான பெண்ணின் பெயர் மதுமிதா, வயது 35 என்றும், மணமகள் மற்றும் மணமகன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பதில் கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது இந்த குழப்பத்திற்கு விடை கிடைத்துள்ளது. அதாவது ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என்ற சீரியலுக்காக தான் இந்த விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இந்த சீரியலின் நாயகன் ஜெய் ஆகாஷ் 45 வயது நபராக நடிக்கும் நிலையில், நாயகியாக நடிக்கும் மதுமிதா 35 வயது நிரம்பியவராக நடிக்கும் நிலையில் இருவருக்கும் மணமகள் மற்றும் மணமகன் தேடும் கதை தான் ’நெஞ்சத்தை கிள்ளாதே’ என்று கூறப்படுகிறது.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலுக்கா இவ்வளவு பில்டப் என்று பொதுமக்கள் தற்போது வழக்கம் போல் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.