'தல 57' படப்பிடிப்பின் புதிய அப்டேட்

  • IndiaGlitz, [Monday,January 30 2017]

அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பல்கேரியா உள்பட ஒருசில ஐரோப்பிய நாடுகளிலும், ஐதராபாத்திலும் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் 80% படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு அஜித்துக்கு ராசியான சென்னை பின்னி மில்லில் நடைபெறவுள்ளது. இதற்கான செட் அமைக்கும் பணி இரவுபகலாக நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் பல்கேரியா நாட்டில் நடைபெறும் இண்டோர் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் 'தல 57' படக்குழுவினர் பல்கேரியா செல்லவுள்ளதாகவும், படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

'வதம்' அல்லது 'வியூகம்' என்ற டைட்டில் வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபரா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும்பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கின்றது.

More News

சென்னை பாக்ஸ் ஆபீஸில் தனி முத்திரை பதித்த 2 படங்கள்

சென்னை பாக்ஸ் ஆபீஸில் பொதுவாக பெரிய ஸ்டார் படங்கள் மட்டுமே சாதனை வசூலை புரிந்து வருகின்றன.

விஜய்யின் 'பைரவா' படத்தின் கடந்தவார சென்னை வசூல் நிலவரம்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளிவந்து கலவையான விமர்சனங்கள் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவற்றையும் மீறி தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக திருப்திகரமான வசூலை தந்து கொண்டிருந்தது என்பதை பார்த்தோம்

கடைசி பந்துக்கு முன்னர் பூம்ராவிடம் விராத் கோஹ்லி கூறியது என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றுள்ளது

சென்னையில் மூடப்பட்ட முப்பது ஆண்டுகால சினிமா பொக்கிஷம்

கடந்த 30 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வந்த சினிமா வீடியோ நூலகம் தற்போது மூடப்பட்டது...

ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி. 'சி 3' தயாரிப்பாளர் தகவல்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' படத்தின் பிரஸ்மீட் நேற்று நடந்தது. இதில் சூர்யா, ஞானவேல்ராஜா, ஹரி உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்...