ஆளுனர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகை குறித்த அதிகாரபூர்வ தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
மகாராஷ்டிரா ஆளுனர் வித்யாசாகர் ராவ், தமிழகத்திற்கும் பொறுப்பு ஆளுனராக இருக்கும் நிலையில் இரு மாநில பணிகளையும் அவர் கவனித்து வருகிறார். இன்று அவர் சென்னை வரவுள்ளதாகவும், சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவிருந்ததாகவும் கூறப்பட்டது. இதற்காக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று ஆளுனர் வித்யாசாகர் ராவ் டெல்லி சென்று சட்டநிபுணர்களுடன் கலந்து ஆலோசித்ததாகவும், அதன் பின்னர் அவர் மும்பையில் உள்ள ஆளுனர் மாளிகைக்கு சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதனால் சசிகலாவின் பதவியேற்பு விழா தாமதம் ஆனது.
இந்நிலையில் மும்பை ஆளுனர் மாளிகை சற்றுமுன் செய்திக்குறிப்பு ஒன்றில் 'ஆளுனர் இரண்டு நாள் மும்பை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நாளை சென்னை வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நாளை ஆளுனர் சென்னை வந்தபின்னர் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி திட்டமிட்டபடி சசிகலா முதல்வர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments