பிக்பாஸ் 2 வெற்றியாளர் இவர்தான்

  • IndiaGlitz, [Saturday,September 29 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் நேற்றிரவுடன் வாக்குப்பதிவு செய்யும் முறை முடிந்துவிட்டது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகாவிற்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்து சற்றுமுன் கிடைத்த தகவலின்படி பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் ரித்விகாதான் என்பது தெரியவந்துள்ளது. முதல் நாளில் இருந்தே அமைதியாக வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் ஆழமாக கவனித்து, உண்மையாகவும் இயல்பாகவும் இருந்த ஒரே போட்டியாளர் ரித்விகாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு டாஸ்க்கையும் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட நியாயமாகவும் உண்மையாகவும் விளையாட வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்த ரித்விகா தற்போது அந்த உண்மைக்கும் நேர்மைக்கும் டைட்டிலை பரிசாக பெறவிருக்கின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வெளியேறுபவர் யார்? என்பதை சரியாக நமது வாசகர்களுக்கு சொல்லி வந்த நிலையில், பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் ரித்விகா என்பதையும் பெருமையாக கூறிக்கொள்கிறோம்