காணாமல் போன பிரபல நடிகர் மரப்பெட்டியில் சடலமாக மீட்பு… அதிர்ச்சி சம்பவம்!

  • IndiaGlitz, [Saturday,May 27 2023]

பிரபல பிரேசில் நிகழ்ச்சி ஒன்றில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்புபெற்ற நடிகர் ஒருவர் 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் தற்போது மரப்பெட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் வசித்துவந்த நடிகர் ஜெபர்சன் மச்சாடோ கடந்த ஜனவரி 29 முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருடைய தொலைபேசியில் இருந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வந்த நிலையில் அந்த செய்திகளில் எழுத்துப்பிழை அதிகமாக இருந்ததாகவும் அது என் மகனுடையதல்ல என்றும் அவரது தயார் மரியா தாஸ் டோரஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து 4 மாதங்களாக தீவிர தேடுதலில் ஈடுபட்ட போலீசார் நடிகர் ஜெபர்சனின் உடலை அந்த நடிகருக்குச் சொந்தமான ரியோ தோட்டத்தில் இருந்து கண்டெடுத்துள்ளனர். மரத்தடியில் 6.5 அடிக்கும் கீழே இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள அவரது உடல் ஒரு மரப்பெட்டியில் வைக்கப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காணாமல் போன நடிகரை ரியோ தோட்டத்தில் வாடகைக்கு வந்த மற்றொரு நபர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல நடிகர் ஒருவரை கொலை செய்து அவருடைய தோட்டத்திலேயே மரத்தடிக்குக் கீழ் மரப்பெட்டியில் வைத்து புதைத்துள்ள இந்தச் சம்பவம் தற்போது பலரையும் பீதியடைய வைத்திருக்கிறது.
 

More News

ரம்யா பாண்டியனை என்ன செஞ்சு வச்சிருக்கார் பாருங்க பிளேபாய் போட்டோகிராபர். வைரல் வீடியோ..!

பிளேபாய் இதழுக்கு போட்டோ எடுக்கும் போட்டோகிராபர் ரம்யா பாண்டியனை வைத்து எடுத்து உள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன

'ஜெயிலர்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தமன்னா.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது

முதல் திருமண நாளில் குழந்தையுடன் சூப்பர் போட்டோஷூட்.. அஜய்-ஜெஸ்ஸி தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

சூப்பர் சிங்கர் பாடகர் அஜய் மற்றும் அவரது மனைவி ஜெஸ்ஸி ஆகியோருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் தற்போது தங்களது முதல் வருட திருமண நாளை கொண்டாடியதோடு, குழந்தையுடன் கூடிய சூப்பர்

எளிமையான தோற்றத்தால் வசீகரித்தவர்… பாலிவுட் நடிகையின் கேன்ஸ் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் தொழில் அதிபராகவும் இருந்துவரும் நடிகை ஒருவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட புகைப்படம்

முதல் இந்தியர் இவர்தான்… மிரள வைக்கும் விராட் கோலியின் சோஷியல் மீடியா சாதனை!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்து தற்போது முக்கிய வீரராக விளையாடி வரும் விராட் கோலி