விஜய்சேதுபதிக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை பிரேசில் அதிபருக்கும்....

  • IndiaGlitz, [Thursday,December 26 2019]

பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனரோ கடந்த திங்கட்கிழமை தனது குளியல் அறைக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்தார். அப்போது அவருடைய பின்னந்தலையில் பலத்த அடிபட்டது.

இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 10 மணி நேர சிகிச்சைக்கு பிறகு பிரேசில் அதிபர் வீடு திரும்பினார். இருப்பினும் பிரேசில் அதிபருக்கு பழைய நினைவுகள் மறந்து விட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் சிகிச்சைக்கு பின்னரே படிப்படியாக அவரது நினைவுகள் மீட்கப்பட்டது. தற்போது அவர் முழு அளவில் குணமாகி, நலமாக இருப்பதாக பேட்டி ஒன்றில் அதிபர் ஜெயீர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி நடித்த ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற படத்தில் அந்த படத்தில் அவர் நடித்த நாயகன் கேரக்டருக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டு அதன் பின்னர் சிகிச்சை பின் குணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விஜய்சேதுபதிக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை பிரேசில் அதிபருக்கும் ஏற்பட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.