சொகுசு பங்களாவில் செயற்கை ஏரி? வசமாக சிக்கிய நட்சத்திர வீரருக்கு 28 கோடி அபராதம்!
- IndiaGlitz, [Tuesday,July 04 2023] Sports News
கால்பந்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் பிரபலமாக இருந்துவரும் பிரேசில் கால்பந்து வீரர் ஒருவர் தன்னுடைய சொகுசு பங்களாவில் செயற்கையாக ஏரி அமைத்து தற்போது சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
பிரேல் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மர் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த சமீபகாலமாக பிரபல கிளப் அணியான பிஎஸ்ஜிக்காக விளையாடி வருகிறார். உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் இவரை அந்த அணி 222 மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இந்நிலையில் காயம் காரணமாக தனது வலது கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் நெய்மர் கடந்த பிப்ரவரியில் இருந்து விளையாடாமல் இருந்து வருகிறார். இதனால் மீண்டும் அவர் பார்சிலோனா அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரேசில் தலைநகர் ரியோ டிஜெனிராவின் தென் கிழக்கு கடற்கரை ஒட்டிய மங்கராதிபா எனும் பகுதியில் நெய்மர், சொந்தமாக சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2016 இல் வாங்கிய அந்தப் பங்களாவில் தற்போது பல கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் அவருக்கு 16 ரைஸ் அதாவது 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
காரணம் நெய்மர் தனது சொகுசு பங்களாவிற்கு அருகில் இருக்கும் இயற்கையான நதி ஒன்றின் போக்கையே மடைமாற்றியதாகவும் அதன் நீர் போக்கை தனது செயற்கை ஏரிக்கு அவர் பயன்படுத்திக் கொண்டதாகவும் அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு கடுமையான குற்றச்சாட்டினை வெளியிட்டு இருக்கிறது.
மேலும் 1,07,000 சதுர மீம்டர் பரப்பளவில் சொகுசு பங்களாவை வைத்திருக்கும் நெய்மர் அவ்வபோது நதியில் பார்டி வைத்து கொண்டாடியதாகவும் அதில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கும் நிலையில் 3.5 மில்லியன் டாலர் அபராதம் (இந்திய மதிப்பில் 28.6 கோடி) விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதுகுறித்த சட்டப்பூர்வ அணுகலுக்காக அவருக்கு 20 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.