6 மனைவிகளோடு உல்லாசமாக வாழும் இளைஞர்… திடீரென்று முளைத்த பிரச்சனை?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆறு பெண்களைத் திருமணம் செய்துகொண்டு உல்லாசமாக வாழ்ந்துவரும் இளைஞர் ஒருவருக்குப் புதிதாக ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்த செய்தி தற்போது சமூகவலைத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் இந்தத் தகவலைப் பார்த்த 90ஸ் கிட்ஸ்கள் பலரும் தங்களது சலிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியில் வசித்துவரும் 37 வயதான இளைஞர் ஆர்தர் ஓ உர்லோ. இவர் தற்போது 6 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த உறவுகளைத் தவிர ஏற்கனவே ஆர்தர் சில பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்களை விட்டு பிரிந்து இருக்கிறார். அந்த வகையில் இதுவரை அவருக்கு 10 திருமணங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறார். மேலும் பழைய திருமண உறவின் மூலம் 10 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி உல்லாசமாக வாழ்ந்துவரும் ஆர்தருக்கு ஒரு புதிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறதாம். அதாவது தனக்கு ஆறு மனைவிகள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு பெண் மூலமும் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள அவர் நினைக்கிறாராம். ஆனால் இந்த ஆறு பெண்களில் யாரை முதலில் கருப்பம் ஆக்குவது என்றுதான் அவருடைய தலையாய பிரச்சனையாகத் தற்போது மாறியுள்ளது. இதுகுறித்து ஒரு முடிவெடுக்க முடியாத ஆர்தர், ஒருவேளை ஒரு பெண் மட்டும் கருப்பம் அடைந்தால் மற்ற மனைவிகள் வருத்தப்படுவார்கள் என்றும் நினைத்திருக்கிறார். இதனால் குழந்தை விஷயத்தில் படு குழப்பம் அடைந்த ஆர்தர் தற்போது இப்பிரச்சனைக்கு ஒரு முடிவு கண்டுபிடித்திருக்கிறார்.
அதாவது முதல் மனைவியின் கரு முட்டையை வைத்துக்கொண்டு வாடகைத்தாய் மூலம் முதலில் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்று ஆர்தர் முடிவுசெய்துள்ளார். இதற்காக வாடகைத் தாயைத் தேடும் படலத்தையும் அவர் ஆரம்பித்துவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து 6 மனைவிகளுக்கும் 6 குழந்தைகள் என்று தனது திட்டத்தை முழுமையாக முடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம். இப்படி 6 மனைவிகள் 6 குழந்தைகள் என்று விறுவிறுப்பாகச் செயல்பட்டு வரும் ஆர்தருக்கு உண்மையில் 10 பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்கள் மூலம் 10 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதே தனது கனவு திட்டம் என்றும் கூறிவருகிறார்.
இன்றைய இளைஞர்கள் பலரும் பொருளாதாரக் காரணங்கள் தொட்டு பல்வேறு காரணங்களால் திருமணம் செய்துகொள்ள முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையல் 10 பெண்கள், 10 குழந்தைகள் என்று கனவுத் திட்டத்தோடு இருக்கும் ஆர்தர் பற்றிய தகவல் தற்போது சமூகவலைத் தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com