இதுவரை நடந்தது போதும்... இனவெறிக்கு எதிராக காட்டம் தெரிவித்த கிரிக்கெட் வீரர் பிராவோ!!!

 

அமெரிக்காவில் நடந்த இனவெறி தாக்குதலுக்கு எதிராகத் தற்போது உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மே 15 ஆம் தேதி தொடங்கிய எதிர்ப்பு போராட்டங்கள் இன்றும் பல அமெரிக்க மாகாணங்களில் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஜெர்மனி அதிபர், முன்னாள் அமெரிக்க அதிபர், ஐ.நா சபை பொதுச் செயலாளர், கனட அதிபர் முதற்கொண்டு பல உலகத் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உலகின் பல இடங்களிலும் தற்போது போராட்டங்கள், விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் இனவெறுப்பு காட்டப்படுவதாக விளையாட்டு வீரர்கள் தங்களது அனுபவங்களை வெளிப்படுத்தி வருகின்றன. வெஸ்ட் இண்டிஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி இந்தியாவில் தான் இனவெறுப்பான வார்த்தையுடன் அழைக்கப்பட்டதாக கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து கிறிஸ் கெயில், தற்போது பிராவோ, ஜிம்பாப்வே அணி வீரர் போமி எம்பாங்க்வா போன்றோர் இனவெறிக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

தற்போது டிவைன் பிராவோ வெளியிட்டுள்ள தனது பதிவில் எங்களுக்கு மரியாதை வேண்டும் என்றே கேட்கிறோம். எங்களுடைய நோக்கம் பழி வாங்குவது அல்ல எனத் தற்போது நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் தன்னம்பிக்கை ததும்பும் அவரது பதிவை பலரும் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். “நாங்கள் எப்போது பழி வாங்க வேண்டும் என்று கேட்கவில்லை. நாங்கள் சமவுரிமை மற்றும் மரியாதையைத்தான் கேட்கிறோம். அவ்வளவுதான். நாங்கள் மற்றவருக்கு மரியாதை அளிக்கிறோம். அப்புறமும் ஏன் நாங்கள் இதை மீண்டும் மீண்டும் அனுபவிக்கிறோம்?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், “எங்களுக்கு மரியாதை மட்டும் தான் வேண்டும். நாங்கள் அன்பை பரிமாறுகிறோம். மக்களை அவர்கள் எப்படி இருந்தாலும் மதிக்கிறோம். அதுதான் இங்கே முக்கியம்” என்றும் கூறியிருக்கிறார் பிராவோ. கறுப்பின மக்கள் தங்களை தாழ்வாக எண்ணக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். “நம் சகோதர, சகோதரிகள் தாங்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இறுதியாக உலகின் தலைசிறந்த சிலரை பாருங்கள். நெல்சன், ஜோர்டன் என பல தலைவர்கள் நமக்கான பாதையை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்” எனவும் பதிவிட்டு இருக்கிறார்.

டிவைன் பிராவோவைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணி வீரர் போமி எம்பாங்க்வா ஒரு செய்தியாளர் சந்திப்பில் “உலகில் என்ன நடந்து வருகிறது என்பதை பார்க்க கவலையாக உள்ளது. ஒரு கறுப்பின மனிதனாக எவ்வளவு விஷயங்களை எதிர்க்கொண்டு இருக்கிறார்கள் என்ற வரலாறு எனக்குத் தெரியும்” என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவில் எழுப்பப்பட்ட ஒரு துளிர் தற்போது உலகின் பல நாடுகளிலும் எதிரொலிக்க ஆரம்பித்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். “நிறத்துடன் இனவெறுப்பு முடிந்து விடுவதில்லை” என்ற கருத்தை நேற்று இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வெளிப்படுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒடிசா: கல்லூரி மாணவர்களுக்கு அடித்தது லாட்டரி!!!

ஒடிசா மாநிலத்தில் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு ரத்துச் செய்யப்படுவதாக அம்மாநில உயர்க் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா விஷயத்தில் நகரங்கள் ரொம்பவே மோசம்!!! மத்திய அரசு கருத்து!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது. இந்நிலையில் கிராமப் புறங்களை விட இந்திய நகர்ப்புறங்களில் 1.09%  என்ற அளவில் கொரோனா பாதிப்பு

சென்னையில் முழு ஊரடங்கா? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் தினந்தோறும் மிக அதிகமாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் மொத்த மதிப்பில் 80 சதவீதத்துக்கும் மேல் சென்னையில்தான் பாதிப்பு உள்ளது என்பது தெரிய வருகிறது

பால், ரோஜாப்பூ பாத்டேப்பில் பிரபல நடிகை குளியல்

பாத்டேப்பில் இதுவரை தண்ணீர் மற்றும் சோப்பு நுரையை வைத்து தான் குளிப்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால் பிரபல நடிகை ஒருவர் பாத்டேப்பில் பால் மட்டும் ரோஜா பூ வைத்து அதில் குளியல் போட்டு

சாகவும் துணிந்த ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷூக்காக சாகவும் தயார் என கூறிய ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது