வெற்றியை சென்னை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்: பிராவோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் பிராவோ, 30 பந்துகளில் 68 ரன்கள் அதிரடியாக அடித்ததே வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது. அதேபோல் ஜாதவ் கடைசி ஓவரில் அடித்த ஒரு சிக்சரும், பவுண்டரியும் வெற்றியை உறுதி செய்தது
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது குறித்து பிராவோ கூறியபோது, இந்த போட்டியில் கிடைத்த வெற்றி ஒரு சிறந்த வெற்றி. இந்த வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். எங்கள் அணி என் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. அந்த நம்பிக்கையை காப்பாற்றியிருப்பதாக கருதுகிறேன். எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறினார்
வெற்றிக்க்கு பின்னர் தல தோனி கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நங்கள் களமிறங்கியுள்ளோம். இந்த போட்டியை காண வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தது. சரியான நேரத்தில் பிராவோ பொறுப்பை உணர்ந்து ஆடினார். நாங்கள் இன்னும் நன்றாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். இருப்பினும் எந்த ஒரு போட்டியிலும் நான் பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே எடுத்து கொள்வேன். அதேபோல் இந்த போட்டியிலும் பிராவோ மற்றும் ஜாதவ் ஆட்டம் சிறப்பாக இருந்தது என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments