காற்று மாசுபாடு ஆண்மையை குறைக்குமா? பகீர் ரிப்போர்ட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மனித மூளைக்கும் அவர்கள் பாலியல் உறுப்புகளுக்கும் இடையே தொடர்பு உண்டு என்பதை மருத்துவ உலகம் ஏற்கனவே நிரூபித்து இருக்கிறது. இந்நிலையில் காற்று மாறுபாட்டால் மனித மூளையில் வீக்கம் ஏற்படுகிறது என்றும் அதைத் தொடர்ந்து விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது என்றும் அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
மாசுபட்ட காற்றை சுவாசிக்கும்போது சுவாச கோளாறு, இருதய நோய்கள், உடல்பருமன், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்ததுதான். ஆனால் முதல்முறையாக காற்று மாசுபாட்டால் ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைந்து போகிறது என மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது காற்று மாசுபாடு குறித்து ஆய்வுசெய்த விஞ்ஞானிகள் மாசுபட்ட காற்றால் மனித மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு காரணமாக ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதை விளக்கியுள்ளனர். மேலும் இதுபோன்ற கருத்துகளை சில விஞ்ஞானிகள் ஏற்கனவே வலியுறுத்தி இருந்த நிலையில் அதைத் தற்போது மேரிலேண்ட் விஞ்ஞானிகள் நிரூபித்து காட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் ஆண்கள் ஏற்கனவே பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்நிலையில் காற்று மாசுபாடும் ஆண்களுக்கு சிக்கலை கொண்டுவரும் என்ற தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout