close
Choose your channels

20 வருடங்களுக்கு பின் சந்திக்கும் காதலர்கள் முன்னா-ஹரிணி .. வைரல் வீடியோ..!

Sunday, September 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘பாய்ஸ்’ படத்தில் காதலர்களாக நடித்த சித்தார்த் மற்றும் ஜெனிலியா 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் சந்தித்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி ’பாய்ஸ்’ திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியாகி சமீபத்தில் தான் இருபதாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ஜெனிலியா ஆகிய இருவரும் முன்னா, ஹரிணி கேரக்டரில் நடித்திருப்பார்கள் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல நடிகர் கிச்சா சுதீப் பிறந்தநாள் கொண்டாட்டம் பெங்களூரில் நடந்த போது அதில் நடிகை ஜெனிலியா தனது கணவருடன் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் ’பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாட எனது முன்னாவை நான் 20 வருடங்களுக்குப் பின் சந்திக்கிறேன் என்று ஜெனிலியா அதன் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment