20 வருடங்களுக்கு பின் சந்திக்கும் காதலர்கள் முன்னா-ஹரிணி .. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,September 03 2023]

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘பாய்ஸ்’ படத்தில் காதலர்களாக நடித்த சித்தார்த் மற்றும் ஜெனிலியா 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் சந்தித்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி ’பாய்ஸ்’ திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியாகி சமீபத்தில் தான் இருபதாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ஜெனிலியா ஆகிய இருவரும் முன்னா, ஹரிணி கேரக்டரில் நடித்திருப்பார்கள் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல நடிகர் கிச்சா சுதீப் பிறந்தநாள் கொண்டாட்டம் பெங்களூரில் நடந்த போது அதில் நடிகை ஜெனிலியா தனது கணவருடன் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் ’பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாட எனது முன்னாவை நான் 20 வருடங்களுக்குப் பின் சந்திக்கிறேன் என்று ஜெனிலியா அதன் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

உங்க பிரச்சனை தீர்றதுக்கு அதைவிட பிரச்சனையான இடத்துக்கு வந்துருக்கிங்க.. 'சந்திரமுகி 2' டிரைலர்..!

 ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி 2'. இந்த படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்

இன்ஸ்டாவில் நயன்தாரா ஃபாலோ செய்யும் 20 பேர்.. அதில் எத்தனை தமிழ் திரையுலகினர் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்கினார் என்பதும் முதல் வீடியோவில் தனது உயிர் மற்றும் உலகு ஆகிய இரு மகன்களுடன் ஸ்டைலாக நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்

'விடாமுயற்சி' படத்தின் ஹீரோயின் 'காலா' நாயகியா? அப்ப த்ரிஷா என்ன ஆச்சு?

அஜித் நடிக்க இருக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வைரல்

விஜய் டிவி பிரபலம் திருமணம்.. வைரல் வீடியோ..!

விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கோமாளியாக ஒரே ஒரு சீசன் தான்.. புதிய கார் வாங்கி அப்பா-அம்மாவுக்கு கிஃப்ட்..!

 குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட மோனிஷா புதிய கார் வாங்கி தனது அப்பா அம்மாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.