ஓடும் காரில் தந்தைக்கு மாரடைப்பு: சாமர்த்தியமாக செயல்பட்ட 10 வயது மகன்!

  • IndiaGlitz, [Thursday,May 02 2019]

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கார் ஓட்டிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்து ஓடும் காரை சாமர்த்தியமாக நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்த அவரது 10 வயது மகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால் நேற்று அவர் வேலைக்கு செல்லும்போது மகனையும் காரில் சிவகுமார் அழைத்து சென்றுள்ளார்.

காரை சிவகுமார் ஓட்டிக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். இதனை அருகில் இருந்து பார்த்த அவரது மகன் அதிர்ச்சியடைந்தாலும், கட்டுப்பாடின்றி சென்ற காரை சமயோசிதமாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தந்தையை இழந்த சோகத்திலும் விபத்தை தவிர்க்க சாமர்த்தியமாக செயல்பட்ட அந்த 10 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 

More News

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இருக்கு: நடிகர் தினேஷ்

பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் தினேஷ் நடித்து முடித்துள்ள 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தோனி ஒரு 'பச்சைத்தமிழன்': பிரபல நடிகையின் மாமியார் கருத்து!

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தல தோனிக்கு சிறுவர்கள், நடுத்தர வயதினர் மட்டுமின்றி வயது பேதமின்றி அனைத்து தரப்பினர்களும் ரசிகர்களாக உள்ளனர் என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

பின்னி மில்லில் பயங்கர தீவிபத்து: 'தளபதி 63' பட அரங்குகள் எரிந்து நாசம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையம் அருகே உள்ள பின்னி மில்லில்

சமையல் செய்யாத மனைவியை தட்டிக்கேட்ட கணவருக்கு கரண்டி அடி!

வீட்டில் சமையல் செய்யாமல் சித்தி வீட்டுக்கு சென்ற மனைவியை தட்டி கேட்ட கணவரை மனைவியும் அவரது சித்தியும் சேர்ந்து தாக்கியதால் கணவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸ் யூனிபார்மில் காதலருடன் உல்லாசம்: பெண் போலீஸ் இடமாற்றம்

போலீஸ் யூனிபார்முடன் காதலருடன் அந்தரங்கமாக இருந்த பெண் போலீஸ் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.