கள்ளக்காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது!

  • IndiaGlitz, [Thursday,February 27 2020]

கள்ளக்காதலியை சந்திப்பதற்காக மாங்காய் குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அய்யம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயது கூலி தொழிலாளி ராஜாங்கம். இவருக்கும் கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் உள்ள ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நள்ளிரவில் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது கள்ளக்காதலியை சந்திக்க ராஜாங்கம் அவரது வீட்டருகே வந்துள்ளார். ஆனால் அவருடைய வீடு பூட்டி இருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் அவர் வெளியே வரும்வரை காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வெளியே வராததால்அந்த பெண்ணை வெளியே வரவழைக்க ராஜாங்கம் பெட்ரோல் குண்டு ஒன்றை அவரது வீட்டின் அருகே வீச முடிவு செய்தார். 

இதனையடுத்து அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி பெட்ரோல் குண்டு தயார் செய்து அருகிலுள்ள மாங்காய் குடோன் மீது பெட்ரோல் குண்டை வீசினார். அவ்வாறு பெட்ரோல் குண்டு வீசினால் அந்த பெண் வெளியே வருவார் என்று ராஜாங்கம் எதிர்பார்த்த நிலையில் அவர் வீசிய் பெட்ரோ குண்டால் மாங்காய் குடோன் தீப்பற்றி மிகப்பெரிய விபத்தாகியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாங்கம் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெட்ரோல் பங்கில் இந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ராஜாங்கம் தான் வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி சென்றது தெரியவந்தது இதனையடுத்து அவரை பிடித்து விசாரணை செய்தபோது கள்ளக்காதலியை சந்திக்கவே தான் பெட்ரோல் குண்டு வீசியதாக ஒப்புக்கொண்டார் இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 

More News

கலவரத்தை தூண்டியவர்களை கைது செய்ய சொல்லிய நீதிபதியை உடனடி இடமாற்றம் செய்த மத்திய அரசு..!

டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரை பஞ்சாப்- ஹரியானா நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் குடியரசுத் தலைவர்.

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் 'டாக்டர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

கொரோனா வைரஸ்.. ஜப்பானில் அனைத்து கால்பந்து போட்டிகளையும் ஒத்திவைத்தது ஜே-லீக்..!

"நாளை திட்டமிடப்பட்ட லெவின் கோப்பை போட்டிகளையும் அனைத்து அதிகாரப்பூர்வ ஆட்டங்களையும், மார்ச் 15 வரை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம்" என்று ஜே-லீக்

'இந்தியன் 2' விபத்து: முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்த பிரபலம்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு பிரபலம் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

'திரெளபதி' படத்திற்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்: பிரபல அரசியல்வாதி

ஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'திரெளபதி' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியான நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.