அருண்விஜய் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,November 19 2018]

கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான அருண்விஜய் நடித்த 'செக்க சிவந்த வானம்' சமீபத்தில் வெளிவந்து அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்த நிலையில் அவர் தற்போது 'தடம்', 'வா டீல்', மற்றும் பிரபாஸ் நடித்து வரும் 'சாஹோ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அருண்விஜய் ஹீரோவாக நடிக்கும் இன்னொரு படத்தின் டைட்டில் 'பாக்ஸர்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அருண்விஜய் பாக்ஸராக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்ஸ்ர் வேடத்தில் அவர் கச்சிதமாக பொருந்துவார் என்பதால் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என தெரிகிறாது.

விவேக் இயக்கத்தில் லியோன் இசையில் மார்க்கஸ் ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் பாலசந்தர் கலை இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தை மதியழகன் தயாரிக்கவுள்ளார்.