மர்ம உறுப்பில் மறைத்து வைத்து கோகைன் கடத்தல்: மும்பை விமான நிலையத்தில் பெண் கைது
- IndiaGlitz, [Sunday,March 08 2020]
பொலிவியா சேர்ந்த பெண்ணொருவர் மர்ம உறுப்பில் மறைத்து வைத்து கோகைன் கடத்திய நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பொலிவியா நாட்டைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் 11 காண்டம்களில் கோகைன் என்ற போதைப்பொருள் நிரப்பி அதில் இரண்டு பாக்கெட்டுகளை தனது மர்ம உறுப்பில் மறைத்து வைத்துள்ளார். மீதமுள்ள 9 பாக்கெட்டுகளை படத்தில் ’அயன்’ படத்தில் வருவது போல் விழுங்கி வயிற்றில் வைத்து கடத்தி உள்ளார்
இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் அவரை சந்தேகத்துடன் பார்த்த போலீசார் அவரை சோதனை செய்ய முடிவு செய்தனர். அவரை பெண் போலீசார் சோதனை செய்தபோது அவருடைய மர்ம உறுப்பில் இரண்டு பாக்கெட்டுக்களில் கோகைன் இருந்து இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவரை ஸ்கேன் செய்தபோது அவரது வயிற்றில் 9 பாக்கெட் காண்டம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டபோது மொத்தம் 312 கிராம் கோகைன் இருந்ததாகவும் அதன் மதிப்பு இந்திய மதிப்பில் ரூபாய் 1.55 கோடி என்றும் கூறப்படுகிறது
இதனை அடுத்து மும்பை போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது