கொரோனாவால் பலியானவருக்கு கிடைத்த ரூ.60 லட்சம்: திடீரென பங்கு கேட்ட இரண்டாவது மனைவி
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவால் பலியாகிய ரயில்வே போலீஸ் குடும்பத்திற்கு கிடைத்த நிதியுதவியான ரூ.60 லட்சத்தில் திடீரென பங்கு கேட்டு பலியானவரின் இரண்டாவது மனைவி நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கடந்த மே மாதம் 30ஆம் தேதி கொரோனாவால் உயிர் இழந்தார். அவருக்கு மாநில அரசு மற்றும் ரயில்வே நிறுவனம் 60 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது. அந்த பணத்திற்கு உரிமை கொண்டாடி அவரது மனைவி மற்றும் மகள் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் திடீரென இன்னொரு பெண் மறைந்த சப்-இன்ஸ்பெக்டர் தனக்கும் கணவர் என்றும், தனக்கும் ஒரு மகள் இருப்பதாகவும் இழப்பீட்டு தொகையில் தனக்கும் பங்கு வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் இதனால் ரயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விசாரணை செய்த போது இறந்த சப் இன்ஸ்பெக்டருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதும் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை அவர் திருமணம் செய்திருந்தார் என்பதும், இரண்டு திருமணங்களும் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மனைவியின் மகள் வழக்கு தொடர்ந்தார். சப் இன்ஸ்பெக்டருக்கு கிடைத்த இழப்பீடு பணத்தை நான்காக பிரித்து, முதல் மனைவி, முதல் மனைவியின் மகள், இரண்டாம் மனைவி, இரண்டாம் மனைவியின் மகள் ஆகிய நால்வரும் சமமாக வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை. இழப்பீடு பணத்தில் இரண்டாவது மனைவிக்கு பங்கு கிடையாது என்றும் முதல் மனைவி, முதல் மனைவியின் மகள், இரண்டாவது மனைவியின் மகள் ஆகிய மூன்று பேருக்கு மட்டும் வழங்கலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தது. இருப்பினும் இதுகுறித்து முதல் மனைவி தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார்.
இந்த வழக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், அன்றைய தினம் இந்த பணம் பிரித்துக் கொடுப்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் பலியான சப்இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பது அவரது மரணத்திற்குப் பின்னர் தெரியவந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments