அடுத்தடுத்து சில மணி நேரங்களில் 2 உறவினர்களை இழந்த நடிகர் போஸ் வெங்கட்.. ரசிகர்கள் ஆறுதல்...!

  • IndiaGlitz, [Saturday,June 24 2023]

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் அடுத்தடுத்த சில மணி நேரங்களில் இரண்டு பேர் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தது அவரது குடும்பத்தினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரை உலகின் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்த போஸ் வெங்கட். என்பதும், இவர் ‘கன்னிமாடம்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போஸ் வெங்கட் தனது சமூக வலைத்தளத்தில் தனது உடன் பிறந்த சகோதரி வளர்மதி குணசேகரன் இயற்கை எய்தினார் என்று நேற்று பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து போஸ் வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சகோதரியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதன் என்பவர் சென்னைக்கு வந்திருந்த நிலையில் சகோதரியின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்டு அவரும் மரணம் அடைந்தார். இதனை அடுத்து இருவரது இறுதிச்சடங்கு அறந்தாங்கியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து சில மணி நேரங்களில் தனது சகோதரர் மற்றும் சகோதரி ஆகிய இருவரையும் இழந்து வாடும் போஸ் வெங்கட்டிற்கு ரசிகர்கள் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.