கொரோனாவால் இறந்தால் குடும்பத்தினர்களுக்கு 2 வருடம் சம்பளம்: அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,May 03 2021]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பம் நிர்க்கதியாகி உள்ளதை அடுத்து முக்கிய நிறுவனமொன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
Borosil Limited and Borosil Renewables Ltd என்ற நிறுவனம் சற்று முன் அறிவித்த அறிவிப்பு ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு எங்கள் நிறுவன ஊழியர்கள் யாராவது இறந்தால் அவர்கள் வாங்கும் சம்பளம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும். அதுமட்டுமின்றி கொரோனாவால் பலியானவர்களின் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரை அவர்களுடைய கல்விச் செலவு முழுவதும் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்
இந்த சலுகை யாருக்கும் தேவைப்படக்கூடாது என்றுதான் நாங்கள் கடவுளை பிரார்த்திக்கிறோம். இருப்பினும் ஒருவேளை எதிர்பாராத வகையில் கொரோனாவால் ஊழியர்கள் மரணமடைந்தால் இந்த சலுகை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே ஒவ்வொருவரும் தயவுசெய்து கவனமுடனும் பாதுகாப்புடனும் உடல் நலத்தை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பு மிகப்பெரிய வரவேற்பை ஊழியர்கள் மத்தியில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது