கொரோனா நேரத்தில் ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரதமர்!

  • IndiaGlitz, [Monday,May 31 2021]

இங்கிலாந்து பிரதமர் மோரிஸ் ஜான்சன் நேற்று ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கொரோனா நேரத்தில் இங்கிலாந்தில் கடும் கட்டப்பாட்டு விதி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோரிஸ் ஜான்சன் (56) தனது நீண்டநாள் காதலி ஹேரி சைமண்டஸ்ஸை (33) திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஹேரி சைமண்டஸ் மற்றும் பிரதமர் மோரிஸ் ஜான்சன் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு ஒரு குழந்தையும் பிறந்து உள்ளது.

இதையடுத்து மிக விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்ற அறிவிப்பை இந்தத் தம்பதிகள் வெளியிட்டனர். இந்த அறிவிப்பு வெளியான நிலையில் நேற்று திடீரென லண்டனில் உள்ள வேஸ்ட்மின்ஸ்டர் சர்ச்சில் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தத் திருமணத்தில் சொற்பமான நபர்களே இடம்பெற்றனர் என்றும் இந்தத் திருமணத்திற்காக நேற்று மதியம் 1.30 மணிக்கு சர்ச் மூடப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

போரிஸ் ஜான்சன் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது கொரோனா நேரத்தில் எளிய முறையில் தனது காதலியைக் கரம்பிடித்து இருக்கிறார். இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஹேரி சைமண்டஸ் தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.