கொரோனா இருக்கா… வீட்டு தனிமையில் இருந்தால் ரூ.18 ஆயிரம் உதவித்தொகை!!! அதிரடி அறிவிப்பு!!!
- IndiaGlitz, [Friday,August 28 2020]
கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் மோசமான தாக்கத்தை அனுபவித்து வந்தன. ஆனால் அந்நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சில துரிமான நடவடிக்கைகளால் தற்போது கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பல ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தி வருகின்றன. ஆனால் ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தும் பட்சத்தில் இரண்டாவதுகட்ட கொரோனா அலை மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகமும் எழுப்பப் படுகிறது.
இந்நிலைமையை தவிர்க்க இங்கிலாந்து அரசாங்கம் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. அதாவது கொரோனா உறுதிச்செய்யப்பட்டு தன்னை முறையான விதிமுறைகளோடு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கு அரசாங்கமே உதவித்தொகை தந்து அவரது பொருளாதார இழப்பீட்டை சரி செய்யும். இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் முறையாக வீட்டுத் தனிமையில் இருக்க விரும்புவார்கள். இதனால் மற்றவர்களுக்கு நோயைப் பரப்பும் விகிதம் குறையும் எனவும் இங்கிலாந்து அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
கொரோனா தாக்கத்தால் ஏற்கனவே பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் பலரது பொருளாதார நிலைமை சீர்க்கெட்டு இருக்கும். மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மக்களின் நிலைமை கடும் சிக்கலுக்குரியதாக மாறிவிடும். இதைத்தடுக்க இங்கிலாந்து அரசாங்கம் அதிகமாக கொரோனா தாக்கம் இருக்கும் மாகாணங்களில் இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அத்தகைய பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் 14 நாட்கள் வரையிலும் வீட்டுத் தனிமையில் இருந்து கொண்டால் 182 பவுண்டுகளை உதவித்தொகையாக அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்திய மதிப்பில் இது 17ஆயிரத்து 789 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அரசாஙகத்தின் இந்த அறிவிப்புக்கு அந்நாட்டு மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். சிலர் இதுகுறித்து எதிர்மறையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். எதுஎப்படியோ நோயால் பாதிக்கப்படும் சாதாரண மக்களுக்கு அரசாங்கம் குறைந்த அளவில் உதவித்தொகை கொடுக்க முன்வந்திருப்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்