ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது பட டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,August 22 2020]

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த 2010 ஆம் ஆண்டில் ’நீதான் அவன்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னரும் ’அட்டகத்தி’ ’ரம்மி’ ’திருடன் போலீஸ்’ ’காக்கா முட்டை’ ’ஆறாது சினம்’ ’மனிதன்’ ’தர்மதுரை’ ’கட்டப்பாவ காணோம்’ ’லட்சுமி’ ’சாமி 2’ ’வட சென்னை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் 25 படங்கள் என்ற மைல்கல்லை தொட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது பட டைட்டில் இன்று அறிவிக்கப்படுவதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் ’பூமிகா’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படம் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ரவீந்திரன் பிரசாத் என்பவரின் இயக்கத்தில் உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசை அமைக்கிறார். ராபர்ட்டோ ஜாஜ்ரா என்பவரின் ஒளிப்பதிவில் ஆனந்த் ஜெரால்டின் என்பவரின் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஸ்வர்யாவின் 25வது பட டைட்டில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும், 25 படங்கள் என்ற மைல்கல்லை தொட்டுள்ள அவருக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பதும், இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

கைலாஷா நாட்டின் நாணயத்தை வெளியிட்டார் நித்தி: காமெடியின் உச்சகட்டம் அரங்கேறியதா?

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று கைலாஷா நாட்டின் நாணயத்தை வெளியிடப்போவதாகவும், உள்ளூர் மக்களுக்காக ஒரு நாணயமும் வெளிநாட்டு பரிவர்த்தனைக்காக

தமிழ் நடிகையின் இடுப்பில் கைவைத்தாரா பாஜக முதல்வர்? வைரலாகும் வீடியோ

பாஜகவைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் தமிழ் நடிகை ஒருவரின் இடுப்பில் கைவைத்ததாக வைரலாகி வரும் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த..: சிஎஸ்கே வீரரின் அதிர வைக்கும் டுவீட்

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட மொத்தம் 8 அணிகள் விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தி தெரியாதவர்கள் விலக வேண்டுமா? கமல்ஹாசன், வைரமுத்து ஆவேசம்!

சமீபத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில்

வந்தாரை வாழ வைக்கும் சென்னை: சென்னை தின சிறப்பு கட்டுரை

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது தெரிந்ததே. அதேபோல் தமிழகத்தின் உள் மாவட்ட மக்களை குறிப்பாக தென்மாவட்ட மக்களை வாழ வைக்கும் தாய் வீடாக சென்னை இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.