ஜெயம் ரவியின் 'பூலோகத்திற்கு விடிவு காலம் வருமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ரோமியோ ஜூலியட்', 'சகலகலாவல்லவன்' மற்றும் 'தனி ஒருவன்' ஆகிய மூன்று படங்களை கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என மூன்று மாதங்களில் வெளியிட்டு முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பிடித்துவிட்டார் ஜெயம் ரவி. அதிலும் 'தனி ஒருவன்' படத்தின் வெற்றி அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது.
ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர்களின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கும்போது மூன்று வருடங்களாக முடங்கி இருக்கும் 'பூலோகம்' தற்போது வெளியானால் கண்டிப்பாக படம் வெற்றி பெறும் என கூறப்படுகிறது. பேரண்மை படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாணகிருஷ்ணன் இயக்கிய படம், ஜெயம் ரவி-த்ரிஷா ஜோடியில் உருவான படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஃபைனான்ஸ் பிரச்சனையால் சிக்கிய காரணத்தால் இந்த படம் வெளிவரமுடியாமல் முடங்கியுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக இந்த படம் வெளிவர முடியாத நிலையில் உள்ளது. இதேபோல் முடங்கிக்கிடந்த பல படங்கள் ஒருசிலரின் முயற்சியால் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. அதேபோல இந்த படத்திற்கும் ஒரு விடிவுகாலம் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com