உலகின் மிகப்பெரிய விருதான புக்கர் விருது அறிவிப்பு…
Send us your feedback to audioarticles@vaarta.com
இலக்கியத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் புக்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் வாழும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான டக்ளஸ் ஸடூவர்ட் எழுதிய “ஷக்கி பெயின்“ எனும் நாவல் இந்து விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.
பிழைப்புக்காக ஒரு ஏழைக்குடும்பம் படும் கஷ்டங்களையும் அதற்கு நடுவில் அந்தக் குடும்பத்தின் குழந்தைகள் பெற்றோர்கள் மீது வைக்கும் பாசத்தையும் காட்சிப்படுத்தி இருக்கும் ஷக்கி பெயின் நாவல் தற்போது புக்கர் விருதைப் வென்றிருக்கிறது. இதனால் எழுத்தாளரான டக்ளஸ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
எழுத்துத் துறையில் மிகப்பெரிய விருதாகக் கருதப்படும் புக்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. பிரிட்டனில் அமைந்துள்ள இதன் நிர்வாகம் 5 பேர் கொண்ட தேர்வாளர்களை வைத்து விருதுக்கான புத்தகத்தை தேர்வு செய்யும். கடந்த 50 ஆண்டுகளாக இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விருதில் உலகின் பல்வேறு மொழிகளில் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல்கள், நாவல்கள் போன்றவை தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த ஆண்டுக்கான இறுதிக்கட்ட விருது நூலில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அவ்னி தோஷியின் பிரன்ட் சுகர் நாவலும் இடம் பெற்று இருந்தது.
மேலும் 2020 புக்கர் விருதுக்கான விழாவில் முன்னாள் அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமா மற்றும் ககவோ இஷிகரோ, மார்கரெட் அட்வுட், பெர்னார்டின் எவரிஸ்டோ போன்ற பல பிரபல எழுத்தாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர். கடந்த 50 வருடங்களாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments