அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும்.. போனிகபூர் வாரிசு தெரிவித்த விருப்பம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த 'துணிவு’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என 'துணிவு’ படத்தின் தயாரிப்பாளரான போனிகபூரின் வாரிசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அர்ஜூன் கபூர் என்பது தெரிந்ததே. போனிகபூரின் மகனான அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் தனது விருப்பத்திற்குரிய நடிகர் என்றும் அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது தென்னிந்திய திரைப்படங்களின் வியாபாரம் விரிவடைந்துள்ளது என்றும் அவை பான் இந்தியா திரைப்படமாக வெளியாவதால் வசூலை வாரி குவிக்கின்றது என்று தெரிவித்துள்ளார். மேலும் அஜித்துடன் ஒரு படத்தில் நல்ல கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தை மாநில மொழி படங்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் தென்னிந்திய படங்களை இன்னும் அதிகம் அவர் தயாரிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments