ஒரு வழியாக 'வலிமை' அப்டேட் தந்த போனிகபூர்!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் இந்த படத்தின் உள்நாட்டு படப்பிடிப்பு முடிவடைவதாகவும், இதனை அடுத்து வெளிநாட்டில் ஒரே ஒரு ஸ்டன்ட் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டிய நிலை உள்ளதாகவும் சமீபத்தில் போனிகபூர் பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைவதால் அந்த படத்தின் அப்டேட் குறித்த தகவல் இன்று வெளிவரும் என்று அஜீத் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வலிமை’ குறித்த ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். எங்களது சிறப்புக்குரிய படமான ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகும். மேலும் இந்த படம் எங்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய ஒரு படம் என்று பதிவு செய்துள்ளார்.

ஒருவழியாக ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை கொடுத்துவிட்ட போனி கபூரை இதுவரை தூற்றி கொண்டிருந்த அஜித் ரசிகர்கள் தற்போது பாராட்டி கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அர்ச்சனா வெளியே, வனிதா உள்ளே: ஜீடிவியின் முக்கிய சீரியலில் வனிதா!

ஜீ டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்த டிவியில் இருந்து வெளியேறினார்

காதலர் தினத்தில் கர்ப்பமான செய்தியை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை!

காதலர் தினத்தில் திரைஉலக மற்றும் சின்ன திரையுலக நட்சத்திரங்கள் ஒருவருக்கொருவர் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருந்த நிலையில்

சூர்யா இல்லாமலே நடந்த 'சூர்யா 40' பட பூஜை: வைரல் புகைப்படங்கள்!

சூர்யா நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யாவின் 40வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

மாளவிகா மோகனன் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: த்ரில் டீசரும் வெளியீடு!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த மாளவிகா மோகனன் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு? வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

சுற்றுச் சூழல் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.