அஜித் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்த போனிகபூரின் டுவீட்

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அப்டேட்களை கேட்டு அஜித் ரசிகர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் தயாரிப்பு தரப்பிலிருந்தும், இயக்குனர் தரப்பிலிருந்தும் எந்தவிதமான அப்டேட்டுக்களும் சமீபத்தில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அஜித் ரசிகர்கள் கிட்டத்தட்ட சேர்ந்துவிட்டனர்.

இந்த நிலையில் போனிகபூர் சற்று முன்னர் தான் தயாரிக்கும் படங்களில் ஒன்றான ’VakeelSaab’ என்ற படத்தின் அப்டேட் குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். பவர்ஸ்டார் பவன்கல்யாண் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் மார்ச் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த பாடலை அனைவரும் கேட்டு மகிழுங்கள் என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவை பவர் ஸ்டாரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

போனிகபூரின் இந்த அறிவிப்பு அஜீத் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. VakeelSaab படத்திற்கு முன்னரே தொடங்கப்பட்ட ’வலிமை’ படத்தின் அப்டேட்களை அவர் தெரிவிக்கவில்லை என்பதே அஜித் ரசிகர்களின் மாற்றத்துக்கு காரணம். இருப்பினும் விரைவில் போனிகபூர் ’வலிமை’ குறித்த அப்டேட்டுக்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

பிரபல நடிகரின் மகன் நடிக்கும் ஐந்து மொழி படத்தில் ப்ரியா பவானிசங்கர்

நடிகை பிரியா பவானிசங்கர் தற்போது 'இந்தியன் 2' உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் ஐந்து மொழிகளில் தயாராக உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க பிரியா பவானிசங்கர்

குணமாகி வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று..! திணறும் மருத்துவர்கள்.

எப்படி முழுமையாக குணமாகும் அதற்கு எவ்வளவு நாள் ஆகும் என தெரியாமல் மருத்துவர்கள் குழம்பி நிற்பதால் இந்த வைரஸ் மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.    

நடிகைகளை ஓரங்கட்டிய தொலைக்காட்சி விஜே: சேலையில் இவ்வளவு கவர்ச்சியா?

விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்கள் என்பது தெரிந்ததே. சிவகார்த்திகேயன்,

இனி பயப்படாமல் கலப்பு திருமணம் செய்யலாம்!!! கேரள அரசின் புதிய நடவடிக்கை

சாதி, மதம் மாறி கலப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கேரள அரசு காப்பகங்களை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது.

எச்சரிக்கை..! டெல்லி கலவரத்திற்கு எதிராக இரான் தலைவர் கண்டணம்.வைரல் டிவீட்.

உலகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படாமல் இருக்க இந்திய அரசானது இந்துத்துவ ஆதரவாளர்கள் மற்றும் அது சார்ந்த கட்சியினருக்கு எதிராக முடிவெடுத்து இஸ்லாமியர் படுகொலைகள் திரும்பவும் நடக்காமல் தடுக்க வேண்டும்