'வலிமை' வசூல் உண்மையாகவே ரூ.200 கோடியா? போனிகபூர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

அஜித் நடித்த 'வலிமை’ திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை வாரி குவித்தது என தகவல் வெளியானது. இந்த படம் 5 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் 12 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. ஒரு சிலர் இந்த படம் மிகப்பெரிய தோல்வி படம் என்றும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றும் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் 'வலிமை’ வசூல் குறித்து இருவேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக 'வலிமை’ திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து 'வலிமை’ 200 கோடி வசூல் செய்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நாளை முதல் ஓடிடியில் வெளியாகும் என்றும் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.