'வலிமை' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை: போனிகபூர் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் ஒரே ஒரு சேஸிங் காட்சியின் படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் விரைவில் இந்த காட்சியும் வெளிநாட்டில் படமாக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் உள்பட அனைத்து பணிகளையும் அஜித் முடித்துவிட்டதாகவும் சேஸிங் காட்சியின் படப்பிடிப்பை முடித்து விட்டால் அவரது பணி இந்த படத்தை பொருத்தவரை முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வியாபாரம் சம்பந்தமான டுவிட் ஒன்றை தயாரிப்பாளர் போனிகபூர் பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளதாக போனி கபூர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இரு நிறுவனங்களும் மிகப்பெரிய தொகை கொடுத்து ’வலிமை’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை இணைந்து பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்திருக்கும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.
We at Bayview Projects & Zee Studios are happy to announce that the Tamil Nadu theatrical rights of our film #Valimai have been entrusted with Raahul of Romeo pictures @mynameisraahul and @Gopuram_Cinemas
— Boney Kapoor (@BoneyKapoor) March 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com