மூன்று கண்டங்களுக்கு செல்லும் அஜித்தின் அடுத்த படம்!
- IndiaGlitz, [Saturday,June 08 2019]
தல அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், மீண்டும் அஜித் படத்தை தயாரிக்கவுள்ளார் என்பதும், எச்.வினோத் இயக்கும் இந்த படம் அஜித்தின் விருப்பத்திற்குரிய மோட்டார் சைக்கிள் ரேஸ் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் வெளிவந்த செய்திகள் குறித்து ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தை மூன்று கண்டங்களில் படமாக்க போனிகபூர் திட்டமிட்டுள்ளார். புடாபெஸ்ட், தென்னாப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் என மூன்று கண்டங்களில் உள்ள நாடுகளில் இந்த படம் நான்கு ஷெட்யூல்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்ப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.