நாளை காலை 9.09க்கு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு: போனிகபூர் டுவீட்டால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் அவர்கள் தற்போது அஜித் நடித்து வரும் ’வலிமை’ உள்பட ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் நாளை காலை 9.09 மணிக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தியை அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் அந்த டுவிட்டை அவர் பவன் கல்யாண், நிவேதா தாமஸ், அஞ்சலி ஆகியோருக்கு டேக் செய்து உள்ளதால் இந்த அறிவிப்பு அஜிதின் ‘வலிமை’ படம் குறித்த தகவல் இல்லை என்பதால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் இந்த அறிவிப்பு போனிகபூர் தயாரித்து வரும் ‘பிங்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படம் குறித்த அறிவிப்பு என்பதும் உறுதியாகியுள்ளது.
அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் தமிழில் ’நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அஜித், சாரதா ஸ்ரீநாத் நடித்த இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. அமிதாப்பச்சன், அஜீத் நடித்த வேடத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார் என்பதும் டாப்ஸி மற்றும் சாரதா ஸ்ரீநாத் நடித்த வேடத்தில் நிவேதா தாமஸ் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அஞ்சலி மூன்று பெண்களில் ஒருவராக நடிக்கிறார்.
இந்த நிலையில் நாளை காலை 9.09 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போனிகபூர் வெளியிடுவார் என்றும் அதில் பவன் கல்யாணுடன் நடிக்கும் 3 நடிகைகள் குறித்த தகவல்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
We have something to show you tomorrow at 9:09AM !!!@PawanKalyan@i_nivethathomas @yoursanjali @SVC_official @BayViewProjOffl #SriramVenu @MusicThaman#PSPK26#VakeelSaab
— Boney Kapoor (@BoneyKapoor) September 1, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments