'துணிவு' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த போனிகபூர்.. அஜித் ரசிகர்கள் குஷி!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிப்பில், எச்வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள 'துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 'துணிவு’ படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா’ என்ற பாடல் அனிருத்தின் குரலில் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற இன்னொரு பாடலான ’காசேதான் கடவுளடா’ என்ற பாடல் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த பாடலை மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இன்று வெளியாகும் இந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Money Money Money !!
— Boney Kapoor (@BoneyKapoor) December 17, 2022
Its all about the Money ??#KasethanKadavulada out tomorrow/out today at 2 pm
Stay Tuned#ThunivuSecondSingle pic.twitter.com/H0qPmTVj3K
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments